உள்நாடுசூடான செய்திகள் 1

குணமடைந்து வீடு திரும்பியவருக்கு மீண்டும் கொரோனா

(UTV|கொழும்பு)- அனுராதபுர பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பிய 36 வயதுடைய பெண் ஒருவருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் குறித்த பெண் அனுராதபுரம் மருத்துவமனையில் இருந்து கொழும்பு ஐ டி எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த பெண் கடந்த மாதம் 18 ஆம் திகதி குவைட் நாட்டில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக அடையாளம் காணப்பட்டநிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குறித்த பெண் குணமடைந்து வீடு திரும்பிய நிலையிலே, இவ்வாறு மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்

Related posts

பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் விடுமுறை

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

2019ம் ஆண்டின் வரவு – செலவுத் திட்டம் (நேரடி)