உலகம்

அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் பிரேசில்

(UTV | பிரேசில் ) – பிரேசில் நாட்டில் கொரோனா தொற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பிரேசில் நாட்டில் கொரோனா தொற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரையில் 43,389 ஆக பதிவாகியுள்ளது.

பிரேசிலில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.65 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.37 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

Related posts

 இருமல் மருந்தினை உட்கொண்ட 200 குழந்தைகள் மாரணம்!

தடுப்பூசி செலுத்தாவிடின் இராஜினாமா செய்யுங்கள் : அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

மூன்று மாதங்களுக்குப் பிறகு ஈபிள் டவர் மீண்டும் திறப்பு