வகைப்படுத்தப்படாத

மலையகத்தில் மோடி

(UDHAYAM, BOLLYWOOD) – ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெருந்தோட்டப் பகுதி மக்களையும் சந்திக்கவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்னர் தெரிவித்தார்.

அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பல்வேறு சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார்.

குறித்த விஜயத்தின் போதே மேற்படி சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையை திறந்து வைக்கவுள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் 500 மில்லியன் நிதியுதவில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த வைத்தியசாலையின் புதிய கட்டிட திறப்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கரமசிங்க ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதுடன் நோர்வூட் விளையாட்டு மைத்தானத்தில் இடம்பெறவுள்ள விசேட கூட்டத்திலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

බස් ගාස්තු සංශෝධනයක් සිදුවිය යුතුයි – ගැමුණු විජේරත්න

වී මිල ඉහල දැමිමට අගමැති කැමැත්ත පල කරයි

கஞ்சா விற்பனை செய்ய கனடா அனுமதி