(UTV|கொழும்பு)- அரச புலனாய்வு சேவையில் பணியாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சட்டபீட மாணவரை எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று(15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இவ்வாறு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 14 ஆம் திகதி தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தை முறியடித்து சந்தேகநபரை கைது செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அரச புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துடன் தொடர்புடைய 24 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.