உள்நாடு

பூங்காக்கள், சரணாலயங்கள், மிருகக்காட்சி சாலைகள் இன்று முதல் திறப்பு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பூங்காக்கள், சரணாலயங்கள், மிருகக்காட்சி சாலைகள் உள்ளூர்   மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்காக, எதிர்வரும் இன்று (15) முதல்  மீளத் திறக்கப்படவுள்ளதாக, வனஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 பரவல் காரணமாக, தேசிய பூங்காக்களும் தாவரவியல் பூங்காக்களும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இத்தேசிய பூங்காக்கள் மூடப்பட்டதை தொடர்ந்து,  திறைசேரிக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதோடு, இவற்றின் வருடாந்த வருமானம் 7,000 மில்லியனாகும் எனவும், அவர் தெரிவித்தார்.

Related posts

இன்று கொழும்பில் பிம்ஸ்டெக் மாநாடு

அமரர் ஆறுமுகனின் பூதவுடலுக்கு மலையகத்தில் பெரும் திரளான மக்கள் அஞ்சலி [PHOTOS]

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை