கேளிக்கை

பிரபல ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை

(UTV|இந்தியா)- பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுஷாந்த் சிங் ராஜ்புட் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான “M.S. Dhoni: The Untold Story” படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

34 வயதான சுஷாந்த் சிங் மும்பை பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சுஷாந்த் சிங்கின் இந்த திடீர் மரணம் பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன், இதுகுறித்து பொலிஸார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவருடைய மேலாளர் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

‘வெந்து தணிந்தது காடு’ : 15ம் திகதி வெளியாகும்

கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா

சோனாலி பிந்த்ரேவிற்கு விக் அனுப்பிய ஹீரோயின்