கேளிக்கை

பிரபல நடிகர்கள் பலருக்கு பாதுகாவலராக இருந்த மாரநல்லூர் திடீர் மரணம்

(UTV | இந்தியா) – பிரபல நடிகர்கள் பலருக்கு பாதுகாவலராக இருந்த மாரநல்லூர் தாஸ் மஞ்சள் காமாலையால் உயிரிழந்துள்ளார்.

நடிகர்கள் விஜய், சூர்யா, மம்மூட்டி, பவன் கல்யாண் உள்ளிட்ட பல பிரபல நடிகர்களுக்கு பாதுகாவலராக இருந்தவர் மாரநல்லூர் தாஸ். தாஸ் ஏட்டன் என்று அழைக்கப்பட்ட அவருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அவருக்கு வயது 47. தாஸ் ஏட்டனின் மரண செய்தி குறித்து அறிந்த திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தாஸின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ள பிரபலங்கள் அவரின் குடும்பத்தாருக்கு தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Related posts

ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட  படத்துக்கு அசாம் அரசு ரூ.50 லட்சம் பரிசு

“ரூம்’ல தனியா விடாதீங்க.. நாம முழிச்சக்கணும்.. எனக்கும் 2 குழந்தைங்க ..” – கார்த்தி

பேட்மிண்டன் வீராங்கனை ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் பிரபல நடிகர்