உலகம்

அமெரிக்காவை தொடர்ந்து பிரேசில்

(UTV | பிரேசில்) – கொரோனாவால் பாதிப்பு அடைந்து பலியானோர் எண்ணிக்கையில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடம் பிடித்துள்ளது பிரேசில்.

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

பிரேசிலில் கடந்த சில நாட்களாக 25 முதல் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

பிரேசிலில் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41,900 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதன்மூலம் பிரிட்டனை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தில் உள்ளது.

கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.29 லட்சத்தை தாண்டியது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்குகிறது.

Related posts

மீண்டு வா இந்தியா : துபாய் புர்ஜ் கலீபா கட்டிடங்களில் இந்தியக் கொடி

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்.

மற்றுமொரு பயணிகள் விமானம் காணாமல் போயுள்ளது