உள்நாடு

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணி நேர நீர்வெட்டு

(UTV|கொழும்பு)- கொழும்பின் சில பகுதிகளில் நாளை(14) காலை 9 மணி முதல் 15 மணித்தியால நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ், நீர்க்குழாய் திட்டத்தை விரிவாக்கும் நடவடிக்கைகளினால் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு 2, 3, 7, 8 மற்றும் 10 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதுடன், காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையான குறித்த காலப்பகுதிக்குள் கொழும்பு 1-இல் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

குளியாப்பிட்டிய கட்சி கூட்டம்: UNP நவீன் அதிருப்தி

ஒரு கோடி பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது

வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம்

editor