(UTV | சீனா) – சீனாவுக்கு ஆதரவாக கருத்துக்களை பரப்பும் வகையில் இயங்கி வந்த 170 000 கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.
சீனாவில் சமூக வலைதளமான டுவிட்டர் அதிகாரபூர்வமாக தடை செய்யப்பட்டிருந்தாலும், வி.பி.என். மூலம் பலரும் டுவிட்டரை பயன்படுத்தி வருகின்றனர். சீன ஆதரவு பிரசாரத்தின் நோக்கமானது, வெளிநாடுகளில் உள்ள சீனாவை சேர்ந்தவர்களின் திறனை பயன்படுத்தி கட்சியின் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான முயற்சி என டுவிட்டருடன் இணைந்து பணியாற்றிய ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.