(UTV | பிரேசில்) – எதிர்வரும் 2023ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக்கிண்ண கால்பந்து தொடரை நடத்துவதில் இருந்து பிரேசில் கால்பந்து சபை விலகியுள்ளதாக, சர்வதேச கால்பந்து சம்மேளனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பிரேசிலில் பாரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரேசில் நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 2023ஆம் ஆண்டுக்கான மகளிர் கால்பந்து உலகக்கிண்ண தொடரை நடத்துவதில் இருந்து விலக பிரேசில் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
இதேவேளை 2023 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக்கிண்ண கால்பந்து போட்டியை நடத்தும் நாடு எதிர்வரும் 25ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என சர்வதேச கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.