உள்நாடு

சுமார் 104 கிலோ கேரள கஞ்சா மீட்பு

(UTV|கொழும்பு)- யாழ்ப்பாணம், குசமன்துறை பகுதியில் மேற்கொள்ள்பட்ட சுற்றிவளைப்பில் கடல் வழியாக நாட்டுக்கு கொண்டுவரப்பட இருந்த 25 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 57 கிலோ கிராம் எடையுள்ள கேரளா கஞ்சா தொகையை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதற்கமைய மாதகல் பிரதேசத்தை சேர்ந்த இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளதுடன், இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து மேலும் 13 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 46 கிலோவுக்கும் அதிகமான கேரளா கஞ்சா போதை பொருளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதற்கமைய மொத்தமாக 104 கிலோ கிராமுக்கும் அதிகமான கேரளா கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் அவர்கள் பயன்படுத்திய டிங்கி படகையும் மேலதிக விசாரணைகளுக்காக இளவாழை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

லெபனானில் சிக்கியிருந்த 171 இலங்கையர்கள் தாயகத்திற்கு

தீங்கு விளைவிக்கும் அமைப்புகள் தொடர்பில் ஜனாதிபதி கருத்து

மாகாணங்களுக்கு இடையே வரையறுக்கப்பட்ட போக்குவரத்து