உலகம்

இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 இலட்சத்தை தாண்டியது

(UTV|கொவிட்-19)- இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் நேற்று மட்டும் 11,320 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 309,603 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,890 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 154,330 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 146,383 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் 7,739,831 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 428,337 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆப்கானிஸ்தானில் தாலிபானின் இடைக்கால அமைச்சரவை

கொரோனாவின் வீரியம் – ஸ்பெயின் மீண்டும் முடக்கம்

உலகிலேயே முதல்முறையாக 3 பெரு வியாதிகள் ஒரே நேரத்தில்