உள்நாடுசூடான செய்திகள் 1

மீண்டும் நாடு திரும்பிய 223 இலங்கையர்கள்!

(UTV | கொவிட்-19) – நாடு திரும்ப முடியாமல் பிலிபைன்சில் சிக்கி இருந்த 223 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்கள் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் நேற்று (11) இரவு 10.30 க்கு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இவ்வாறு வருகை தந்தவர்களிடம் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதுடன், அதன் முடிவுகள் கிடைக்கும் வரை அவர்கள் விமான நிலைய வளாகத்தில் உள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஜப்பானில் தங்கியிருந்த இலங்கை கடற்படை வீரர்கள் இருவரும் இன்று (12) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக அததெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று முதல் நாடு முழுவதும் QR முறை நடைமுறைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68 ஆவது வருட பூர்த்தி மாநாடு இன்று

ஜனாதிபதி கம்போடியாவுக்கு விஜயம்