உலகம்

தென்கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்த வடகொரியா முடிவு

(UTV|வட கொரியா)- வட கொரியா மற்றும் தென் கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்துவதாக வட கொரியா அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வட கொரிய எல்லை நகரான கேசிங்கிற்கு தென் கொரியாவில் இருந்து செய்யப்படும் வழக்கமான தினசரி அழைப்புகளை இன்று முதல் வட கொரிய அரசு நிறுத்தியுள்ளது.

வட கொரியா மற்றும் தென் கொரிய அதிகாரிகள் இடையிலான அனைத்து தொலைத் தொடர்புகளையும் ஜூன் 9-ம் திகதி 12 மணி முதல் நிறுத்தப்பட்டதாக என கேசிஎன்ஏ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இராணுவம் தொடர்பான தொடர்புகளும் நிறுத்தப்படுவதாக வட கொரியா அறிவித்துள்ளது.

2018-ல் நடந்த தென் கொரிய அதிபர் மற்றும் வட கொரிய தலைவர் இடையே நடந்த உச்சி மாநாட்டில் முடிவு செய்யப்பட்ட அமைதி ஒப்பந்தங்களை மீறி, சிலர் பிரசுரங்களை விநியோகித்து பிரசாரங்களில் ஈடுபடுவது ஒரு விரோதமான செயல் என கிம் யோ-ஜோங் தெரிவித்திருந்தார்

Related posts

வீரியம் காணும் ஒமிக்ரோன்

சீனாவிற்கான அனைத்து விமானங்களும் இரத்து

டிக்டாக் மீதான தடை நீக்கம்