உள்நாடுசூடான செய்திகள் 1

தபால்மா அதிபர் – பந்துல குணவர்தன இன்று விசேட கலந்துரையாடல்

(UTV|கொழும்பு)- தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன நிர்வாக அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் சனிக்கிழமைகளில் தபால் நிலையங்களை மூடுவது உள்ளிட்ட பல காரணிகள் தொடர்பில் ஆராய்வதற்கான இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, தபால் ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் மேலதிக நேர பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்துவருவதாக ஐக்கிய தேசிய தபால் ஊழியர்கள் சங்கத்தின் பொது செயலாளர் எச்.ஏ. ஆர் நிஹால் தெரிவித்துள்ளார்.

தபால் பணியாளர்களின் மேலதிக நேர கொடுப்பனவை தவிர்ப்பதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானம் மற்றும் சனிக்கிழமைகளில் தபால் நிலையங்களை மூடுவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – வெளியேறினார் அகில

இலங்கை மக்களுக்கான மகிழ்ச்சித் தகவல்!!!

இலகு பணப்பரிமாற்றத்தின் கீழ் சீனாவிடம் இருந்து கடன்