உள்நாடுவணிகம்

பேருவளை மீன்பிடி துறைமுக செயற்பாடுகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவலையடுத்து, பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் பொதுமக்கள் முன்னர் போன்று மீண்டும் இன்று (08) முதல் மீன் கொள்வனவில் ஈடுபட முடியுமென பேருவளை துறைமுக முகாமையாளர் தெரிவித்திருந்தார்.

சுமார் 75 தினங்கள் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாதிருந்த நிலையில், சுகாதார வழிமுறைகளுக்கமைய, பொதுமக்கள் மீன்பிடி துறைமுகத்துக்கு வருகைதர முடியும் என அறிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அதிகாலை 5 மணி தொடக்கம் 9 மணிவரையான காலப்பகுதியில் மீன் கொள்வனவு செய்ய முடியுமென, துறைமுக முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

இஸ்ரேலிற்கு சர்வதேச நீதிமன்றமிட்ட உத்தரவு

ஐந்து கோடிக்கும் அதிக பெறுமதியுடைய தங்க ஆபரணங்களுடன் மூவர் கைது

வீரமுனை சர்ச்சை: பிள்ளையானால் வர முடியுமென்றால் ஏன் முஸ்லிம் தலைவர்களால் வர முடியாது! முபாற‌க் அப்துல் ம‌ஜீத்