(UTV | கொழும்பு) – கொழும்பு புறக்கோட்டை மெனிங் காய்கறி சந்தை நாளை முதல் மீண்டும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் திறக்கபடவுள்ளது.
கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக சில காலம் மூடப்பட்டிருந்த பின்னர் மெனிங் சந்தை மீண்டும் சில நிபந்தனைகளின் கீழ் திறக்கப்பட்டது.
இதற்கமைவாக கிருமி அழிப்பு தேவையின் காரணமாக மெனிங் சந்தை இதுவரைகாலமும் ஞாயிற்றுக் கிழமைகளில் மூடப்படடிருந்தது இருப்பினும் நாளை முதல் அதிகாலை 4.00 மணி தொடக்கம் பி.ப 1.00 மணிவரையில் மெனிங் சந்தை வர்த்தக நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என மெனிங் காய்கறி சந்தை வியாபார சங்கத்தின் துணைத் தலைவர் நிமல் அத்தநாயக்க தெரிவித்தார்.
இரண்டு தினங்களாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் இரண்டு தினங்களுக்குப் பின்னர் இன்று மெனிங் சந்தை திறக்கப்பட்டது. குறைந்த அளவிலான மொத்த காய்கறி வகைகளே இன்று மெனிங் மறக்கறி சந்தை வந்திருந்தாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)