கேளிக்கை

‘பிரண்ட்ஷிப்’ திரைப்பட மோஷன் போஸ்டர் வெளியானது [VIDEO]

(UTV | கொழும்பு) – கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், தமிழ் பிக் பாஸ் சீசன் 3 பிரபலம் லொஸ்லியா இணைந்து நடித்துள்ள  ‘பிரண்ட்ஷிப்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

45 விநாடிகள் ஓடக்கூடிய இந்த மோஷன் போஸ்டரில், ஒரு நூலகம் பின்னனியில் தோன்ற, மூவரின் புகைப்படமும் வரிசையாக தோன்றுகிறது. மோஷன் போஸ்டரின் இறுதியில் ஹர்பஜன் சிங் பந்தை வீச, விரைவில் என்ற வாசகத்துடன் நிறைவடைகிறது.

ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், முழுக்க முழுக்க கோயம்பத்தூரில் உள்ள கல்லூரிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படமானது, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது என கூறப்படுகிறது.

ஆக்‌ஷன் கிங் நடிகர் அர்ஜுன் இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய காதப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு சண்டை காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன. தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியுள்ள பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இத்திரைப்படத்தில் கல்லூரி மாணவராக நடித்துள்ளார்.

பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமான இலங்கை செய்தி வாசிப்பாளர் லொஸ்லியா ‘பிரண்ட்ஷிப்’ திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியுள்ளார்.

தற்போது ட்வீட்டர் பக்கத்தில், லொஸ்லியாவின் தீவிர ரசிகர்கள், ‘பிரண்ட்ஷிப்’மோஷன் போஸ்டரை கொண்டாடி வருகின்றனர்.

Related posts

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் ‘அனுஷ்கா’

‘இனி மக்களுக்கு பிடிக்கும் வகையில் நடிப்பேன்’

இவர் யாரென்று தெரிகிறதா? லேட்டஸ்ட் லுக்கில் கலக்கும் பிரபல நடிகை