உள்நாடு

பாடசாலைகளை திறப்பதற்கு முன் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய 32 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

(UTV | கொழும்பு) – பாடசாலைகளை திறந்து காலை, மாலை என இருநேர வகுப்புகளை நடத்துவது தொடர்பில் சாதக பாதக நிலைமைகளை கல்வி அமைச்சு ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கபப்டுகின்றது.

மாணவர்களை சமுக இடைவிலகலுடன் அமரச் செய்யும் பட்சத்தில் ஏற்படும் இடநெருக்கடியை தீர்ப்பது தொடர்பிலும் ஆராயப்படுகிறது என கல்வி அமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாடசாலைகளில் உள்ள சுகாதார வசதிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். இவற்றைக் கருத்தில் கொண்டு பாடசாலைகளை திறப்பதற்கு முன் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டியது முக்கியமானது. இதற்காக 32 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

கோப் குழு மீண்டும் கூடவுள்ளது

மக்களின் ஆணையை மீறி கட்சி தாவியோருக்கு தேர்தலிலே தீர்ப்பு – ரிஷாட் எம்.பி

editor

சுகாதார ஒழுங்குகளை மீறுவோர் பிடியாணையின்றி கைதாவர்