உள்நாடு

வெட்டுக்கிளிகள் தொடர்பில் தகவல்களை வழங்க விசேட தொலைபேசி இல

(UTV | கொழும்பு) – நாட்டின் பல பிரதேசங்களில் பயிர்களை தாக்கும் வெட்டுக்கிளிகள் காணப்படும் பகுதிகள் தொடர்பில் தகவல்களை வழங்க விவசாய திணைக்களத்தினால் புதிய தொலைபேசி இலக்கம் ஒன்று பொது மக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 1920 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு இதுதொடர்பான தகவல்களை தெரிவிக்க முடியும் என்று விவசாய தினைக்கள பணிப்பாளர் நாயகம் கலாசிதி எம்.டப்ளியு .எம். வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்களுக்கு அமைவாக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

பயிர்ச் செய்கைகளில் அல்லது விவசாய நிலங்களில் இது தொடர்பில் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் அது தொடர்பில் அறியத் தருமாறும், 1920 எனும் தொலைபேசி இலக்கம் அல்லது 077 3028 270 எனும் கைத்தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்க முடியும் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதித் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய 10 வேட்பாளர்கள்

அரச வெசாக் நிகழ்வு தற்காலிகமாக இரத்து

திங்கள் முதல் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை திறக்க அனுமதி