(UTV | இங்கிலாந்து) – அமெரிக்காவில் நடப்பதை நாங்கள் அனைவரும் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் என கனடா பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் (George Floyd) என்பவரின் கழுத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் 9 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்த காட்சி வைரலாக, ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணச் செய்தி அமெரிக்காவில் பெரும் போராட்டங்களை கிளப்பியுள்ளது.
குறித்த சம்பவம் அமெரிக்காவில் தொடரும் நிறவெறிகளுக்கு எதிரான போராட்டமாகவும் மாறியுள்ளது.
இந்நிலையில் போராட்டக்கார்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு எதிராக சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள தகவல்களில்,
“அமெரிக்காவில் நடப்பதை நாங்கள் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருப்பதாகவும், இது மக்களை ஒருங்கிணைப்பதற்கான நேரம். அவர்களின் குரல்களை கேட்பதற்கான நேரம்” என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.