உலகம்

ஜோர்ஜ் ப்ளொய்ட் ஆர்ப்பாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிசூட்டில் ஒருவர் பலி

(UTV | அமெரிக்கா) – அமெரிக்க பொலிஸ் காவலில் உயிரிழந்த ஆபிரிக்க அமெரிக்கரான ஜோர்ஜ் ப்ளொய்ட் (George Floyd) இன் மரணம் கொலை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின் பின்னர் குறித்த மரணம் கொலை என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக George Floyd மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக பொலிஸாரினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், பிரேத பரிசோதனையின் பின்னர் George Floyd கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரி ஒருவர் George Floyd இன் கழுத்தில் மண்டியிட்டு நெரிக்கும் காணொளி ஒன்று அண்மையில் வெளியாகி இருந்ததை தொடர்ந்து, அமெரிக்கா முழுவதும் தொடர்ச்சியாக கடந்த ஆறு நாட்களாக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அமெரிக்காவின் Kentucky மாகாணத்தில் பொலிஸார் மற்றும் தேசிய படையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் உயிரிழந்தமை அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

இதன் காரணமாக அமெரிக்கா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அமெரிக்காவில்

கொவிட் 19 வைரஸ் -உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வு

வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த 1 லட்சம் வாத்துக்கள்