உள்நாடு

சிறைச்சாலைகளின் உள்ளக நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு

(UTV | கொழும்பு) – பாதாள உலகக் குழு தலைவர்கள் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தல்காரர்களினால் சிறைச்சாலைகளுக்குள் மேற்கொள்ளப்படுகின்ற குற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளின் உள்ளக நிலைமைகள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(31) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்குள் இடம்பெறுகின்ற பெரும்பாலான குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகள் சிறைச்சாலைகளிலிருந்து மேற்கொள்ளப்படுவதாக, தகவல் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்

இது தொடர்பில் மக்கள் மத்தியில் நீண்டகாலமாக உள்ள அபிப்பிராயம் குறித்து கவலையடைவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இந்த நிலைமை சீர்திருத்தப்பட வேண்டும் எனவும், சிறைச்சாலைகளுக்குள் தொலைபேசி பயன்படுத்துகின்றமை முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிறைச்சாலை மற்றும் பொலிஸ் துறைகள் பலவீனம் அடைவதன் மூலம், நாட்டில் சட்டத்தை நிலைநாட்டுவதில் பாதிப்புகள் ஏற்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சிறைச்சாலை திணைக்களத்திற்குள் காணப்படுகின்ற குறைபாடுகளை கண்டறிந்து, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

“பெற்றோர் மீது தேவையற்ற சுமை இல்லை” – கல்வி அமைச்சு

டிஜிட்டலுக்கு மாறும் பயணச் சீட்டுகளுக்கான விநியோக முறை.

உரங்களின் விலைகள் குறைப்பு.