உள்நாடு

நாளை பொலன்னறுவைக்கு நீர்வெட்டு

(UTV | பொலன்னறுவை) – பொலன்னறுவை நீர் அபிவிருத்தி திட்ட செயற்பாடுகள் காரணமாக நாளை (03) காலை 9.00 முதல் மாலை 6.00 மணி வரை 09 மணித்தியால நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, பெந்திவெவ, ஜயந்திபுர, ஹிரிதலே, எதுமல்பிடிய, லக்ஷ உயன, விஜயபாகுபுர, சந்தன பொகுன, உனகலா வெஹர, ஜயவிக்கிரமசந்தி, 316 தல்பொத, 317 அக்கர 800 மற்றும் சேவாகம நீர் வழங்கல் சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் குறித்த நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு 1939 எனும் தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பொருத்தமான நபரை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

 சீ ஷெல்ஸ்- இலங்கைக்கு இடையில் நேரடி விமான சேவை

மேல் மாகாணத்தில் 2 மணி நேர விசேட சோதனை