(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -வெள்ளைமாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் அங்கிருந்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிலத்திற்கு கீழ் உள்ள பாதாள அறைக்குள் பாதுகாப்பு பிரிவினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் கருப்பின இளைஞர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தை அடுத்து அங்கு பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றது.
இந்தவிவகாரத்தில் பல்வேறு மாகாணங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரம் வெடித்துள்ளது.
அமெரிக்கா முழுவதும் 40 நகரங்களுக்கு மேல் கலவரம் பரவி உள்ளது. 40 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தனது நாட்டு மக்களுக்கு அஞ்சி வெள்ளை மாளிகையின் பாதாள அறைக்குள் பதுங்கிய முதலாவது அமெரிக்க ஜனாதிபதி என்ற வரலாறை படைத்துள்ளார்.