உலகம்

எகிப்தில் முகக் கவசம் கட்டாயமாகிறது

(UTV – எகிப்து) – எகிப்தில் பொது இடங்களுக்கு வருகை தருகின்ற மக்களுக்கு முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

எகிப்தில் பொது முடக்கக் கட்டுப்பாடுகள் தளா்த்தப்படுவதைத் தொடா்ந்து குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொது இடங்களுக்கு வருகை தருகின்ற நபர்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதற்கமைய, குறித்த உத்தரவை மீறுவோருக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்தில் இதுவரை 23,449 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, 913பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5,693 பேர் குணமடைந்துள்ளனர்.

Related posts

முகக்கவசம் தொடர்பில் புதிய ஆலோசனை

ஈரான் ஜனாதிபதியின் மரணம்: இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளது – ரணில்

PakVac தடுப்பூசியின் செயல்திறனில் முனேற்றம்