உள்நாடு

மிரிஸ்ஸ துப்பாக்கிச் சூடு சம்பவம்; துப்பாக்கிதாரி கைது

(UTV | கொழும்பு) – மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்துக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில்  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபரொருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related posts

இலங்கையுடன் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க IMF உத்தேசம்

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள்

அலுவலக ரயில்கள் திங்கள் முதல் சேவையில்