உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 132 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 912 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (29) அதிகாலை 4.00 மணி முதல், இரவு 10.00 மணி வரையான காலப்பகுதியினுள் 132 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த கைது நடவடிக்கை கடந்த 26ஆம் திகதி காலை 4.00 மணி முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள், முகக் கவசங்களை அணியாமை, சமூக இடைவெளியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ வெளியேறல் பகுதிக்கு பூட்டு

இலங்கையில் சுமார் 57 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வறுமையில் வாடுகின்றனர்- உலக வங்கி

நேற்றைய தினம் 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்