உலகம்

நியூசிலாந்தில் கடைசி கொரோனா நோயாளி வீடு திரும்பினார்

(UTV|கொழும்பு)- நியூசிலாந்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடைசி கொரோனா நோயாளியும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து ஆறாவது நாளாக நியூசிலாந்தில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.

நியூசிலாந்தில் இதுவரை கொரோனா வைரசினால் 1,504 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது பல கட்டுப்பாடுகளை அந்நாடு தளர்த்தி வருகிறதுடன், இன்று முதல் பொது இடங்களில் 100 பேர் கூட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆஸ்திரேலியா உடன் எல்லையை திறக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சுவீடன் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

உலக சுகாதார நிறுவனத்தினால் அவசர நிலை

கொவிட் 19 : உலகளவிலான ஆதிக்கம்