உள்நாடு

இலங்கைக்கு 2, 500 பசுக்களை கொண்டுவர அரசு தீர்மானம்

(UTV | கொழும்பு) -நாட்டின் நுகர்வுக்கு  இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் அளவை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு கட்டமாக அவுஸ்திரேலியாவில் இருந்து 2500 பசுக்களை நாட்டிக்கு கொண்டுவர அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரன இதனை அறிவித்துள்ளார்.

கமத்தொழில் அமைச்சர் சமல் ராஜபக்ஸ அமைச்சரவைக்கு முன்வைத்த அமைச்சரவை பத்திரம் மூலமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பால்மா இறக்குமதியால் வெளிநாடுகளுக்கு 50 பில்லியன் ரூபாய்கள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சாய்ந்தமருது அரசியல் மேடையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் – கலகமடக்கும் பொலிசார் களத்தில்

editor

அதிருப்தி வெளியிட்ட வியாபாரிகள்!

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்