உலகம்

ஸ்பெயினில் துக்க தினம் அனுஷ்டிப்பு

(UTV| கொழும்பு)- ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், ஸ்பெயினில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து, 10 நாட்களுக்கு துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச பேச்சாளர் மரியா ஜேசுஸ் மொன்டெரோ ( Maria Jesus Montero) தெரிவித்துள்ளார்.

இதன்போது நாடு முழுவதிலும் உள்ள பொதுக் கட்டடங்கள் , கடற்படையின் கப்பல்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அவர் கூறியுள்ளார்.

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றினால் 283,339 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 27,117 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜப்பானை தாக்கும் ஹாய்ஷென் – 8.1 இலட்சம் மக்கள் வெளியேற்றம்

சசி’யின் ஆட்டம் நிறைவுக்கு?

“பேரழிவுமிக்க தோல்வியை உலகம் எதிர்நோக்கி உள்ளது”