உள்நாடு

தொண்டமான் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் அனுதாபம்

(UTV | கொழும்பு) -அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுதாபம் தெரிவித்துள்ளார்.

அன்னாரின் திடீர் மறைவு குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,

ஆறுமுகன் தொண்டமான் மறைவு இலங்கை மக்களுக்கும், அந்நாட்டிற்கும் பேரிழப்பாகும்.

திறமைமிக்க அமைச்சரான ஆறுமுகன் தொண்டமான் இலங்கை தமிழ் மக்களின் நலனுக்காக பணியாற்றியவர்கள் என்ற பெருமைக்குரியவர்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினருக்கும், இலங்கை மக்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். என அவரின் இறங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related posts

பேராதனை பல்கலைக்கழகினை மூடுவதில் தீர்மானமில்லை

வழமைக்கு திரும்பும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள்

இளைஞர்களின் சிறந்த காலத்தை இருளில் மூழ்கடிக்க முயற்சிக்க வேண்டாம் – இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்