வணிகம்

கொவிட்-19 சவால்களுக்கு மத்தியில் உள்நாட்டு நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்யும் Pelwatte

(UTV | கொழும்பு) – நுகர்வோர் தேவை முகாமைத்துவத்தில் கொவிட்- 19 ஏற்படுத்தியுள்ள சவால்களையும் மீறி, இலங்கையின் உள்நாட்டு பாலுற்பத்தித் துறையின் முன்னணி நிறுவனமான Pelwatte, நாட்டின் நுகர்வோர் எவ்வித தடையுமின்றி தமது நிறுவனத்தின் தயாரிப்புகளை ஸ்தாபிக்கப்பட்ட விநியோக கட்டமைப்பின் மூலமாக, ஊரடங்கு அமுலில் உள்ள மாவட்டங்களில் பெற்றுக்கொள்வதை உறுதி செய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இலங்கைச் சூழலைப் பொறுத்த வரையில், மதிப்பிடப்பட்ட வருடாந்த பால் தேவை 745 மில்லியன் லீற்றர்களாகும், (கொழும்பு/ஜனவரி 27/2020). அந்த வகையில், இது இலங்கையர்களுக்கு மிகவும் பிரதானமானதாகும்.

இதன்மூலம்  கொவிட் – 19  இன் சவால்களையும் மீறி, பால்மா மற்றும் பிற பாலுற்பத்திப் பொருட்களை  அணுகக்கூடிய நிலையில் இல்லாத உள்நாட்டு நுகர்வோரின் வீட்டு வாசஸ்தலங்களுக்கு பாலுற்பத்திகளை வழங்க வேண்டிய அவசியம் இருந்தது.

இதைக் கருத்தில் கொண்டு, தேவைப்படும் நுகர்வோருக்கு வெவ்வேறு பாலுற்பத்திப் பொருட்களை வழங்க Pelwatte  ஒரு விநியோக பொறிமுறையை ஆரம்பித்தது.

இதற்கிணங்க, இந் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் தனது விநியோக சேவையை ஆரம்பித்ததுடன், அதன் தயாரிப்பு வரிசையான (முழு ஆடைப் பால்மா/பட்டர்/யோகர்ட்/ஐஸ்கிரீம்) ஆகியனவற்றைக் கொண்ட பல வகையான பொதிகளை உள்ளடக்கியிருந்தது. ஊரடங்கு காலங்களில் பொதிகள் வாடிக்கையாளர்களின் இடத்திற்கே இலவசமாக விநியோகிக்கப்பட்டன. இந்த விநியோக நடவடிக்கை 2020 மார்ச் 28 முதல் மே 1 வரை முன்னெடுக்கப்பட்டது.

இது Pelwatte, கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களின் வாடிக்கையாளர்களிடமிருந்து சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நடைமுறையை இடைவெளியின்றி தொடர்ந்து முன்னெடுக்கும்படி வாடிக்கையாளர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்த வண்ணமுள்ளன.

“சமூக இடைவெளி குறித்த அரசாங்கத்தின் உத்தரவுக்கு இணங்கியும், பாலுற்பத்திப் பொருட்களுக்கான நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்வதற்கான ஒரு வழியாகவும், அதிக எச்சரிக்கை மிகுந்த மாவட்டங்களில் அத்தியாவசிய பாலுற்பத்திகளுக்கான விநியோக சேவையை நாங்கள் தொடங்கினோம். எங்கள் சமூக ஊடக  கணக்குகளின் மூலம் ஓடர்களைப் பெற்றுக்கொள்ளும் செயல்முறையை நாங்கள் ஆரம்பித்ததுடன், இலவசமாக விநியோகத்தை மேற்கொண்டோம்.

இந்த வீட்டுக்கு வீடு விநியோக சேவை மூலமாக சுமார் 30,000 குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய எம்மால் முடிந்தது,” என Pelwatte Dairy Industries இன் முகாமைத்துவ பணிப்பாளர் அக்மால் விக்ரமநாயக்க தெரிவித்தார்.

இந்த மையப்படுத்தப்பட்ட வீட்டு விநியோக அமைப்பானது களனியில் உள்ள Pelwatte இன் துணைக் களஞ்சியசாலையின் மூலமாக நிர்வகிக்கப்பட்டது. வாடிக்கையாளர்களின் பட்ஜட் மற்றும் தேவையைக் கருத்தில் கொண்டு ரூபா 1500 முதல் ரூபா 5000 வரையான நான்கு வெவ்வேறு வீட்டு விநியோக பொதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

நன்கு நிர்வகிக்கப்பட்ட லொஜிஸ்டிக்குடன் கூடிய நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட விநியோக சங்கிலி மற்றும் நன்கு சீரமைக்கப்பட்ட சரக்கு பராமரிப்பு காரணமாக இந்த முயற்சியானது நுகர்வோரிடமிருந்து நேர்மறையான பின்னூட்டல்களை பெற்றது. நிறுவனம் குறைந்த அளவிலான வளங்களுடன் சேவையைத் தொடங்கிய போதிலும், நுகர்வோரின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடிந்தது.

அந்த வகையில், அதிக வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான தேவையுள்ள இடங்களில் இந்த சேவையை சீரமைக்க Pelwatte எதிர்ப்பார்க்கின்றது. தற்போது நிறுவனமானது மேம்பட்ட சேவைக்கு அவசியமான மேலதிக வளங்கள் தொடர்பில் கருத்தில் கொண்டுள்ளது.

முன்னர் அறிந்திராத பொதுச் சுகாதார நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் கேள்வி மற்றும் நிரம்பலை முகாமைத்துவம் செய்யும் இந்த முழு செயன்முறையும் எமக்கு கற்றல் அனுபவமாக இருந்தது. பல நிறுவனங்களைப் போலவே, ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், எங்கள் உள்ளூர் பால் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதிலும் நாங்கள் முதலில் கவனம் செலுத்தினோம். இரண்டாவதாக, நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்வதற்கான ஒரு பொறிமுறையாக விநியோகத்தை பரிசோதிக்க வேண்டியிருந்தது.

கொவிட்- 19 நெருக்கடியானது நிறுவனங்கள் தங்கள் நுகர்வோரை சென்றடைவதனை எவ்வாறு ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வைத்துள்ளது.

எனவே, Pelwatte நிறுவனத்துக்கு, விநியோகம் மூலமான விற்பனை சங்கிலியை தேர்ந்தெடுத்த எங்கள் முடிவானது, நுகர்வோர் திருப்தியைத் தக்கவைத்துக்கொள்வதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்ததுடன், கொவிட் – 19 இற்கு பின்னர் இதன் மூலம் பால் மற்றும் அதிக உள்ளூர் தயாரிப்புகளின் மூலம் தன்னிறைவடையும் இலங்கை அரசாங்கத்தின் இலக்குகளை எட்டுவதற்கான நம்பிக்கையையும் அளிக்கிறது, என விக்ரமநாயக்க மேலும் தெரிவித்தார்

Related posts

பேக்கரிகளை திறக்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை

கொழும்பு பங்குச் சந்தை நாளை பூட்டு

உள்ளூர் பெரிய வெங்காயத்திற்கு கட்டுப்பாட்டு விலை