உள்நாடு

அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தை திறப்பதற்கு அனுமதி

(UTV | கொழும்பு) – ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தை மீண்டும் திறப்பதற்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கொரோனா தொற்றாளர்கள் 5 பேர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அபுதாபியில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் மீள அறிவிக்கும் வரையில் மூட தீர்மானிக்கப்பட்டது.

அந்நாட்டு சுகாதார பிரிவு விடுத்துள்ள பாதுகாப்பு முறைமைகளுக்கமைய குறித்த தூதரகம் செயற்பட இணங்கியதை தொடர்ந்து திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த தூதரகம் எதிர்வரும் மே 28ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.

Related posts

வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

பிரதமரிடம் இருந்து தேர்தல் குறித்து விசேட அறிக்கை

“பிரதமர் இராஜினாமா செய்வார்” – பதவி விலக வேண்டாமென ஆர்ப்பாட்டம்