உள்நாடுசூடான செய்திகள் 1

இறுதிக் கிரியைக்கான திகதி சற்று முன்னர் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 31 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் உடல்நலக் குறைவினால் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நேற்றிரவு கொழும்பில் காலமானார்.

கொழும்பிலுள்ள தனியார் மலர்சாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ள அவரது பூதவுடல், இன்று முற்பகல் பத்தரமுல்லையில் உள்ள இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவை அடுத்து, மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளைக் கொடிகளை ஏற்றி பொதுமக்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Related posts

பாணந்துறையில் இரண்டு பேர் கைது

சுவசரிய அம்பியூலன்ஸ் சேவையை பெற App வசதி

இன்று நள்ளிரவு முதல் பாண் விலை குறைப்பு.