(UTV | கொவிட் 19) – சீனாவில் புதிதாக 51 பேருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
அவர்களில் 40 பேருக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் ஏதுமில்லை.
இவர்களில் பெரும்பாலோர் கொரோனாவின் மையமாக விளங்கிய வுஹானில் உள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வுஹானில் கடந்த 10 நாளில் 60 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
புதிதாக பாதிப்புக்கு ஆளாகியுள்ள 51 பேரில் 11 பேர் வெளிநாட்டு பயண தொடர்பு உடையவர்கள் என சீன தேசிய சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.
அறிகுறிகள் ஏதுமின்றி கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ள 40 பேரில் 38 பேர் வுஹானை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.