(UTV | கொழும்பு) – போதைப்பொருளுடன் கைதான கிரிக்கெட் வீரர் செஹான் மதுசங்கவை அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கட் வீரர் செஹான் மதுசங்க பன்னலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
இவரிடம் 2 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இலங்கை அணியின் செஹான் மதுசங்கவை நீதிமன்றில் முன்னிலைபடுத்திய பின்னர் அவரை எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.