உள்நாடு

பரீட்சைக்கான கால அட்டவணையில் எந்தவித உண்மைத் தன்மையும் இல்லை

(UTV | கொழும்பு) -சமூக ஊடகங்களில் பரப்பப்படும் உயர்தர பரீட்சைக்கான கால அட்டவணையில் எந்தவித உண்மைத் தன்மையும் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

உயர்தர பரீட்சைகள் தொடர்பில் கல்வியமைச்சும், பரீட்சைகள் திணைக்களமும் வெளியிடும் உத்தியோகர்பூர்வ அறிவித்தல்களில் மாத்திரம் நம்பிக்கை கொண்டு பொறுப்புடன் செயற்படுமாறு பரீட்சாத்திகள் உள்ளிட்ட அனைவரிடமும் கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கவனத்திற்கொண்டு கல்வி சம்பந்தமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் ஆனால் ஒரு சிலர் போலி செய்திகளை பரப்புவதை எண்ணி கவலையடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு போலி செய்தி பரப்புபவர்களுக்கு தொடர்பில் உரிய நடவடிக்கையை எடுக்குமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளர்.

Related posts

வடக்கு – கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தால் தமிழ்க் கட்சிகள் ஏகோபித்து அழைப்பு!

திங்கள் முதல் 2,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு

மிக மோசமாக தாக்கப்பட்டிருக்கும் காசா மக்கள் – என்.சிறீகாந்தா.