(UTV|கொழும்பு)- ஜப்பானில் அமுலில் உள்ள தேசிய அவசர நிலையை தளர்த்துவதாக அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 7-ம் திகதி முதல் நாட்டின் சில பகுதிகளிலும் பின்னர் நாடு முழுவதும் அவசர நிலையை அறிவித்ததன் மூலம், கொவிட் 19 வைரஸ் பரவலை குறைத்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மே மாத மத்தியில் இருந்து ஜப்பானில் சில இடங்களில் அவரச நிலை தளர்த்தப்பட்டாலும் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நீடித்து வந்தது.
ஜப்பானில் 16,550 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதுடன் 820 பேர் உயிரிழந்துள்ளனர்.
பல வளர்ந்த நாடுகளை விட, குறைவான கொரோனா தொற்றுகளையும், மரணங்களையும் ஜப்பான் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.