உள்நாடு

பங்களாதேஷிலிருந்த 276 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- பங்களாதேஷில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் இன்று(24) காலை நாடு திரும்பியுள்ளனர்.

276 இலங்கை மாணவர்களை மீண்டும் நாட்டுக்குள் அழைத்து வர சென்ற விசேட விமானம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள் யூ.எல் – 1423 ரக விமானத்தில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வருகைத் தந்தவர்களும் அவர்களின் உடமைகள் அடங்கிய பைகளும் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்ட பின்னர் அவர்கள் இராணுவத்தின் உதவியுடன் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Related posts

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒன்லைன் சட்டம்!

நாளை காலை 7 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும்

நாட்டுக்கு ரணிலின் வெற்றி அவசியம் – அமைச்சர் டக்ளஸ்

editor