உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்குச் சட்டம் தொடர்பான விசேட அறிவிப்பு

(UTV | கொழும்பு) –கடந்த பல நாட்களாக கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு  பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மே 26 முதல் தளர்த்தப்படவுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் எதிர்வரும் 26 ஆம்  திகதியில் இருந்து இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், 24,25ம் திகதிகளில் நாடளாவிய ரீதியாக ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று(23) இரவு 8 மணிக்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு,எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

இதேவேளை,எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளது.

Related posts

சுனில் ஜயவர்தனவின் கொலை : சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு

நாளை நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்