உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ள நிஸ்ஸங்க சேனாதிபதி

(UTV|கொழும்பு)- எவன்கார்ட் மெரிடைம் சர்விசர்ஸ் தனியார் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதி அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 10 மணிக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எவன்கார்ட் நிறுவனத்தை முறையற்ற விதத்தில் கையகப்படுத்தியதன் மூலம் ஏற்பட்ட நட்டம் குறித்து நிசாங்க சேனாதிபதியால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய வாக்கு மூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள அவர் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, அமைச்சுக்களின் முன்னாள் செயலாளராக கடமையாற்றிய விக்டர் சமரவீர மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முன்னாள் பதில் செயலாளர் சமன் திசாநாயக்க ஆகியோர் செய்த முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மழையுடனான காலநிலை தொடர்ந்தும் சில நாட்களுக்கு நீடிக்கும்

இலங்கையின் நீதித்துறைக்கு இதுவொரு கழுவமுடியாத கறை – முன்னாள் எம்பி சந்திரகுமார்.

 பாடசாலை விடுமுறைகளில் திருத்தம்?