உலகம்

பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

(UTV|கொழும்பு)- பிரேசில் நாட்டில் ஒரே நாளில் 19,969 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு பரவியுள்ளது. நாளுக்கு நாள் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

தற்போது லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.

பிரேசில் நாட்டில் ஒரே நாளில் 19,969 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதனால் அங்கு 332,382 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் தாக்குதலுக்கு அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 21,116 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் பிரேசில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பதவியேற்பின் பின்னர் புட்டின் – பைடன் இடையே உரையாடல்

இந்தியாவிற்கு வரும் முதல் ஆபத்து இலங்கையிலிருந்தே வரும் – வைகோ

“எங்கள் ஆயுதங்களை நாம் கீழே இறக்க மாட்டோம்” – உக்ரைன்