உள்நாடு

கடமையில் இருந்த இராணுவ வீரர் உயிரிழப்பு – மாதிரிகள் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு

(UTV – அம்பாறை) – அம்பாறை, காஞ்சிரங்குடா இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்த நிலையில், திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் நேற்றிரவு (21) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர், 42 வயதுடைய ஜயவிக்கிரம என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

சுவாசப் பிரச்சினை காரணமாகவே இவர் இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டபோதிலும் இறந்தவரின் தொண்டையில் இருந்து பெறப்பட்ட மாதிரியை சந்தேகத்தின் அடிப்படையில் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்காக, மட்டக்களப்பு போதானா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜி.சுகுணன் தெரிவித்தார்.

இதன் அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்பே உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளமுடியுமெனவும் அவர் கூறினார்.

சடலம் தற்போது பாதுகாப்பான முறையில் பிளாஸ்டிக் பையினுள் இட்டு, திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மரணம் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளும் பரிசோதனைகளும் இடம்பெற்று வருகின்றன எனவும் மேலும் கூறினார்.

பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்றதும் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

வி.சுகிர்தகுமார் , எம்.எஸ்.எம். ஹனீபா

Related posts

கொரோனா காரணமாக 15 நாடுகளுக்கு கட்டார் தடை விதிப்பு

களுத்துறை மாவட்டத்திற்கு கொரோனா பரவக் காரணம் சுற்றுலாப் பயணிகளே

பயணக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும்