உள்நாடுசூடான செய்திகள் 1

மருந்து விநியோகத்தின் போது தட்டுப்பாடுகளுக்கும் இடமளிக்க வேண்டாம்

(UTV – கொழும்பு) – மருந்து விநியோகத்தின் போது எந்தவிதமான தட்டுப்பாடுகளுக்கோ தரம் குறைந்த மருந்து உற்பத்தி அல்லது இறக்குமதிக்கோ இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், கடந்த வருடத்திற்கான கேள்வி மாதிரிகளை ஆராய்ந்து அடுத்த வருடத்தின் மருந்துத் தேவைகளைத் தீர்மானிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனங்கள் இரண்டினது தலைவர்களுக்கு இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(21) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க மற்றும் திறைசேறியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.

மருந்துப் பொருட்கள் உற்பத்தி, இறக்குமதி மற்றும் விநியோகம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

Related posts

சனத் நிஷாந்தவின் வீடு எரிப்பு சம்பவம் : சந்தேக நபர்கள் விடுதலை!

பசிலின் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது

போலி ஆபரணங்களை அடகுவைக்கச்சென்ற பெண் ஒருவர் உட்பட நான்குபேர் கைது