உலகம்

இந்தியா, பங்களாதேஷை தாக்கிய அம்பன் சூறாவளி -15 பேர் உயிரிழப்பு

(UTV|கொழும்பு)- அம்பன் (Amphan) சூறாவளியில் சிக்கி இந்தியா மற்றும் பங்களாதேஷில் இதுவரை குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 185 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றினால் மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவிலும், வங்கதேசத்திலும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த அதிதீவிர புயல் கரையை கடப்பதற்கு முன்னதாகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் முப்பது இலட்சம் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

24 வடக்கு பர்கனாஸ் மாவட்டத்தில் சுமார் 5,500 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், கொல்கத்தாவில் வீசிய பலத்த காற்றினால் பல பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

சுமார் 185 கிலோமீட்டர் வேகத்தில் காற்றை வீசியவாறு கரையை கடந்த அம்பன் சூறாவளி, இன்று மேலும் வங்கதேசத்தை நோக்கி நகர்ந்து, பிறகு பூட்டானை நோக்கி செல்லும் என்று கருதப்படுகிறது.

இன்னும் 300 மி.மீ வரை மழை பொழியக்கூடும் என்றும் இதனால் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Related posts

‘ராணி எலிசபெத் அசைக்க முடியாத கருணை’ : இளவரசர் ஹாரி

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 10.96 கோடியை தாண்டியது

ரொய்ட்டர் ஊடகவியலாளர் இஸ்ரேலின் டாங்கி தாக்குதலால் கொல்லப்பட்டது உறுதி!