(UTV | கொழும்பு) – திருகோணமலை, குடாவெல பகுதியியை சேர்ந்த 150 மீனவர்களுடன் 30 படகுகள் இந்தோனேசியாவுக்கு அடித்துச்செல்லப்பட்டுள்ளது.
அம்பன் சூறாவளியின் தாக்கம் காரணமாக பலத்த அலைகளால் குறித்த படகுகள் இந்தோனேசியா கடற்பரப்புக்கு அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த படகுகளில் இருந்த மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.