உலகம்

உலகளவில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 50 இலட்சத்தை கடந்தது

(UTV| கொவிட்-19) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை கடந்தது.

கொரோனா வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு பரவியுள்ளது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்னிக்கை 5,015,742 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 325,509 பேர் உயிரிழந்துள்ளதுடன், இந்த வைரசில் இருந்து 1,979,223 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் அதிகம் பரவிய நாடுகளின் பட்டியலில் அமேரிக்கா முதலிடத்திலும் ரஷ்யா இரடாம் இடத்திலும் ஸ்பெயின் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

Related posts

எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்தியது அவுஸ்ரேலியா

ட்ரம்ப் இனை பின்தள்ளி பைடன் முன்னிலையில்

ஹரமெயின் ரயில் நிலையம் அருகில் பாரிய தீ