(UTV – கொழும்பு) – பாராளுமன்றம் இன்றி நாடு முன்னோக்கி நகரமுடியாது என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் ஜனாதிபதிக்கு எப்போதும் பாராளுமன்றத்தின் ஆதரவு அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றி புதிய பாராளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதிய பாராளுமன்றத்தை கூட்டுவது தாமதமாவதால் நாட்டின் பொருளாதாரம் எதிர்மறையான தாக்கத்திற்குள்ளாகும் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி நாட்டின் அபிவிருத்தியும் பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் போன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சில உடன்படிக்கைகளை செய்து கொண்டு தேர்தலை சந்திக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்..